Breaking News

உபியில் 10 லட்சம் ரொக்கம், நகை, கார், கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளுக்கு HIV வைரஸ் ஊசி போட்ட மாமியார் mother in law injected her daughter in law

அட்மின் மீடியா
0

10 லட்சம் ரொக்கம், நகை, கார், கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளுக்கு HIV வைரஸ் ஊசி போட்ட மாமியார் mother in law injected her daughter in law



உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. 

திருமணத்தின்போது பெண்ணின் தந்தை சுமார் ரூ.45 லட்சம் செலவிட்டுள்ளார். பெண்ணுக்கு நகை போட்டது மட்டுமின்றி, ஒரு கார் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

இவ்வளவு வரதட்சணை கொடுத்தும் அந்த பெண் மாமியார் வீட்டில் நிம்மதியாக இல்லை. திருமணம் முடிந்த ஆசை ஆசையாய் பல்வேறு கனவுகளுடன் கணவருடன் சென்ற அந்த பெண்ணுக்கு மாமியார் உள்பட அவரது குடும்பத்தினர் மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக கேட்டு மருமகளை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். 

கூடுதலாக வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வரும்படி பெண்ணை ஒரே மாதத்தில் வலுக்கட்டாயமாக அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து மூன்று மாதங்கள் அவர் தனது தாய் வீட்டில் இருந்த நிலையில்,இந்த விவகாரம் ஊர் தலைவர்களுக்கு தெரியவந்ததால், இரு வீட்டாரையும் அழைத்து பேசி, அந்த பெண்ணை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைத்த மாமியார், தனது மருமகளுக்கு எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் செலுத்தி உள்ளார். 

இதனால் மருமகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து  பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு புகார் ஏற்கப்படாத நிலையில், உத்தரப்பிரதேசத்தின் சஹன்பூரில் உள்ள நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்தார்

அதில் கடந்த ஆண்டு மே மாதம் என்னுடைய மகளுக்கு அவருடைய மாமியார் எச்.ஐ.வி தொற்றுள்ள சிரிஞ்சை வலுக்கட்டாயமாக செலுத்தினர். அவளுடைய உடல்நிலை விரைவாக மோசமடைந்தது. மருத்துவப் பரிசோதனை முடிவில் மகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கணவருக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று கூறியுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback