புதுச்சேரி தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை உறவினர்கள் சாலை மறியல்
புதுச்சேரி தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை உறவினர்கள் சாலை மறியல்
புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நோனாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்.
ஆசிரியர் மணிகண்டன் அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெற்றோர் பரிசோதித்தபோது, பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.
சிறுமியிடம் விசாரித்தபோது தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டனர்.
தகவல் அறிந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள், இன்று பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மணிகண்டனை மாணவியின் உறவினர்கள் துரத்தி சென்று பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
பள்ளிக்கு வெளியே தவளங்குப்பம் சந்திப்பில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலுார் சாலையில் போக்குவரத்து தடைபட்டது ,அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள் புதுச்சேரி செய்திகள்