உபியில் சோகம்..! திருவிழாவில் லட்டு பிரசாதம் வாங்க கூடிய கூட்டம் மேடை சரிந்து 7 பேர் பலி.. 50 க்கும் மேற்பட்டோர் காயம்
உத்தரபிரதேசம் மாநிலம் பராத் நகரில் நடைபெற்ற திருவிழாவில் 'லட்டு பிரசாதம்' வாங்க சென்ற பக்தர்கள் மீது மரத்திலான மேடை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான பகவான் ஆதிநாதரை போற்றும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவிழாவில் வழிபாட்டு விழாவில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதம் வாங்க பக்தர்கள் மேடையில் ஏறியபோது இடிபாடு ஏற்பட்டு பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.மேலும் 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்ததனர்
அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, தொடர்ந்து மீட்புப் பணிகளில் உதவ அரசு குழுக்கள் வந்தன.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதில் சமூக உறுப்பினர்கள் முக்கியப் பங்காற்றினர், அதே நேரத்தில் அவசரக் குழுக்கள் இடிபாடுகளை அகற்றி இன்னும் சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1884142922330955816
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
