சவூதியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் வாணவேடிக்கை என பரவும் வீடியோ உண்மை என்ன Diwali celebration in Saudi Arabia fake video
பரவும் வீடியோ:-
தற்போது சமூகவலைதளங்களில் பரவலாக பரவும் வீடியோவில் சவூதி அரேபியாவில் தீபாவளி அன்று வானவேடிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்களைக் காட்டும் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் Diwali celebration in Saudi Arabia fake video
2024 இல் சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டங்களை சித்தரிப்பதாகக் கூறப்பட்டு பகிரப்படும் வீடியோவின் உண்மை என்ன
உண்மை என்ன:-
இந்த வீடியோ சவூதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும் ஆனால் தீபாவளி கொண்டாட்டம் அல்ல
உண்மையில் அந்த வீடியோ சவூதியில் கடந்த செப்டம்பர் 23 அன்று சவுதி தனது 94வது தேசிய தினத்தை கொண்டாடியது. அந்த நாளில் வானவேடிக்கை, ரோட் ஷோ மற்றும் அணிவகுப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.
சவூதி தேசிய தினம்
சவூதி அரேபியாவில் 94 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 23, 1932 இல், அரேபியாவின் பெரும் பகுதி ஒட்டோமான் பேரரசிலிருந்து பிரிந்து சவுதி அரேபியா என்ற புதிய நாட்டை உருவாக்கி, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியுடன் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னரானார்.
சவூதி குடிமக்கள் இந்த நாளை மிகுந்த ஆடம்பரத்துடன் கொண்டாடுகிறார்கள் மற்றும் சுதந்திரக் கொண்டாட்டம் போல் தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர்.
சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டத்தின் பழைய வீடியோவை தீபாவளி கொண்டாட்டத்தின் வீடியோ என பொய்யாக பரப்புகின்றார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://www.youtube.com/watch?v=tIZe0zmOAPg
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: FACT CHECK மறுப்பு செய்தி