இனப்படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும் முதல்முறையாக இஸ்ரேலை கண்டித்த சவூதி இளவரசர்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து சாடியுள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவும், அதன் இறையாண்மைக்கு மதிப்பளிக்கவும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாகவும், உடனடியாக போரை கைவிட வேண்டும்.போரை கைவிடாத வரை இஸ்ரேலை அங்கீகரிக்க போவது இல்லை என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் நேற்று முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் :-
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்படவிடாத வரை சவூதி அரேபியா, இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்காது.
மேலும் இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதனை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வெளிநாட்டு செய்திகள்
