Breaking News

தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா அது கொள்கையல்ல கூமுட்டை சீமான் பேச்சு

அட்மின் மீடியா
0

தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா விஜய் கூறுவது கொள்கையல்ல கூமுட்டை சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு

சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் சீமான், 

விஜய் கூறுவது கொள்கையல்ல, கூமுட்டை! சாலையில் ஒன்று அந்த பக்கம் நில், அல்லது இந்த பக்கம் நில்.. இப்படி நடுரோட்டில் நின்றால் லாரி வந்து அடித்துவிடுவான். இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை. 

2026ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. 

தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல; வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பிஎச்டி வாங்கிவிட்டோம். நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேட வேண்டும் என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback