தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையம் 16.11.2023, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 01.01.2025 ம் தேதியன்று 18 வயதினை நிறைவு செய்யும் வாக்காளர்கள் மற்றும் இதர பொதுமக்கள் அனைவரும் மேற்காணும் வாய்ப்பினை பயன்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்அடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திட பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பித்துகொள்ளவும்
Tags: தமிழக செய்திகள்

