Breaking News

மதுரை, திருச்சி ,கோவை , ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று முன்பதிவில்லா ரயில்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மதுரை, திருச்சி ,கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று முன்பதிவில்லா ரயில் முழு விவரம்

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வர கோவை, திருச்சி மற்றும் மதுரையில் இருந்து சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை - சென்னை செண்ட்ரல் சிறப்பு ரயில்:-

நவம்பர் 3 ஆம் தேதி கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளது

06160 என்ற எண் கொண்ட ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அடையும்

மதுரை - தாம்பரம் சிறப்பு ரயில்:-

மதுரை ரயில்நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நாளை மாலை 7.15 மணியளவில் சிறப்பு ரயில் புறப்பட உள்ளது.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில்:-

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.50 மணிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு புறப்பட உள்ளது.

ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில்

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் வரும் 3-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்படுகிறது

வண்டி எண் (06162) மதியம் 3:00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்  பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, அரியலுார், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இரவு 11:40 மணிக்கு தாம்பரம் வந்து அடைகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback