சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீடு கேரள அரசு அறிவிப்பு Sabarimala pilgrims to get free insurance coverage of Rs 5 lakh
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீடு கேரள அரசு அறிவிப்பு. Kerala government has announced an insurance scheme of Rs 5 lakh for the devotees coming to Sabarimala
![]() |
| Sabarimala pilgrims to get free insurance coverage of Rs 5 lakh |
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எவரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.Kerala government has announced an insurance scheme of Rs 5 lakh for the devotees coming to Sabarimala
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஒருவேளை பக்தர்கள் இறந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்” என்று தேவஸ்தான அமைச்சர் வி என் வாசவன்,தெரிவித்துள்ளார்
முன்னதாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி தேங்காய்களை எடுத்துச் செல்வதற்கு சிறப்பு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்திருந்தது
அதன்படி 2025 ஜனவரி 20ம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது கொண்டு செல்லும் இருமுடியை விமானத்தின் கேபினுக்குள் கொண்டு செல்ல சிறப்பு விலக்கு வழங்கி உள்ளதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு இருமுடி விமானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்திருந்தார்.
Tags: இந்திய செய்திகள்
