கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு! முழு விவரம்
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு! முழு விவரம் 4 workers from TN killed after being hit by train in Shoranur
கேரள மாநிலம் பாலக்காடு ஷோர்னூரில் கேரள எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஷொரனூர் பகுதியில் ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த போது ரயில் மோதிய விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்!
ரயில் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட துப்புரவு பணியாளரின் ஒருவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், ஷோர்னூர் ரயில்வே பாலத்தில், பாரதப்புழா ஆற்றின் மீது நடந்துள்ளது. தொழிலாளர்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: இந்திய செய்திகள்