Breaking News

குடும்பத் தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து காட்டுப் பகுதியில் வீசிய கணவர் மாமியார் உள்ளிட்ட 3 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

குடும்பத் தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து காட்டுப் பகுதியில் வீசிய கணவர் மாமியார் உள்ளிட்ட 3 பேர் கைது முழு விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோபுரத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கோபி. இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றபின்பு  அரசுடையான்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் சரண்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மனைவி சரண்யாவை காணவில்லை என்று கோபி காவல் நிலையத்தில் புகார் செய்தார்

ஆனால் தனது மகள் நிலை குறித்து சந்தேகமடைந்த சரண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் கோபி மீது புகார் செய்தனர். இந்நிலையில் கோபி தலைமறைவாகி விட்டார், போலீசார் கோபியின் தாய் சிவகாமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சரண்யாவை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காட்டு பகுதியில் வீசியதாக தெரிவித்தார். 

இதையடுத்து தலைமறைவாக இருந்த கோபியை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து  துண்டு துண்டாக வெட்டப்பட்டு கவரில் கட்டப்பட்ட நிலையில் சரண்யாவின் பாகங்களை மீட்ட போலிசார் உடல் பாகங்களை பிரேத பரிதோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்பு கோபி , கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கோபியின் தாய் மற்றும் கார் ஓட்டுநர் விமல் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback