தலைமறைவாக உள்ள கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.
நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரையடுத்து நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பல புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
விசாரணைக்கு ஆஜராக கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
