Breaking News

சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி சடலமாக மீட்பு 6 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி சடலமாக மீட்பு 5 பேர் கைது முழு விவரம்

சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி சடலமாக மீட்பு முழு விவரம். சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தம்பதியிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். அவரது மனைவி நாபியா. இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். 

இவரது வீட்டில்  தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதாவது தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நாபியா இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

இதுபற்றி யாரிடமும் அவர் தகவல் தெரிவிக்காமல் பயத்தில் நவாஸ் மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டார், நேற்று பிற்பகலில் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அமைந்தகரை போலீசார், சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே, சிறுமியின் சடலத்தில் காயங்கள் இருப்பதால், வீட்டின் உரிமையாளர்  மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

அதில் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவி மற்றும் அவரது நண்பர்கள்  சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன்பின்பு  முகமது நவாஷ் ,நாசியா  மற்றும் கொலைக்கு உடைந்தையாக இருந்த அவரது நண்பர் லோகேஷ், ஜெய்சக்தி, சீமா மற்றும் வீட்டில் வேலை செய்து வரும் மகேஷ்வரி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback