Breaking News

மணிப்பூரில் கலவரம் துப்பாக்கி சண்டையில் 11 பேர் சுட்டுக் கொலை! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மணிப்பூரில் கலவரம் துப்பாக்கி சண்டையில் 11 பேர் சுட்டுக் கொலை! நடந்தது என்ன முழு விவரம்

மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 11 பேரும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மணிப்பூர் மாநிலம் போரோபேக்ரா பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்துவது, கடைகளுக்கு தீயிட்டு எரிப்பது போன்ற நடவடிகைகளில் ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஆயுதக் குழுக்கு எதிராக சிஆர்எஃப் வீரர்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் இருவர் படுகாயம் அடைந்தனர். இதில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback