வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை முழு விவரம்
அட்மின் மீடியா
0
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாகவும், இதனால் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும்
இது தொடர்ந்து வலுப்பெற்று வட தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
02,11,2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Tags: தமிழக செய்திகள்
