ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ 1000 மகளிர் உரிமைத்தொகையா? அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் விளக்கம்!
ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ 1000 மகளிர் உரிமைத்தொகையா? அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் விளக்கம்!
தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் அளித்த விளக்கம்:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிடமாடல் அரசின் இலக்காகும்.
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி