Breaking News

TNSTC Recruitment 2024 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

போக்குவரத்துக் கழகங்களில் உடனடியாக நிரப்பப்பட வேண்டிய 2877 காலிப்பணிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2877 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழக அரசு தற்போது அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 2877 ‌ பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகளை இணைத்து மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் இணைந்த பணியிடங்கள் 2,340, தொழில்நுட்ப பணியிடங்கள் 537 என மொத்தம் 2,877 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதியளித்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில் 

ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்களுக்கானகாலி பணி இடங்களைநிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback