மும்பை அன்னதானத்தில் முஸ்லிம் பெண் உணவு கேட்ட போது ஜெய் ஸ்ரீராம் கூறினால் தான் உணவு என கூறி உணவு மறுக்கப்பட்டது வைரல் வீடியோ mumbai food jai shri ram
மும்பையில் அன்னதானத்தில் முஸ்லிம் பெண் உணவு கேட்ட போது ஜெய் ஸ்ரீராம் கூறினால் தான் உணவு என கூறி உணவு மறுக்கப்பட்டது வைரல் வீடியோ mumbai food jai shri ram
Near Mumbai’s Tata Hospital, an NGO was distributing food to patients. A Muslim woman standing in line was asked by the person distributing the food to say "Jai Shri Ram" or else she wouldn't be given any food.
மும்பையில் தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய அன்னதானத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் வரிசையில் நின்று உணவு கேட்ட போது ஜெய் ஸ்ரீராம் சொன்னால்தான் உணவு எனக்கூறி அவருக்கு உணவு மறுக்கப்பட்டது இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது
மும்பையின் ஜெர்பாய் வாடியா சாலையில் உள்ள டாடா மருத்துவமனைக்கு வெளியே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக உணவு வழங்கியது இதனை பெற்றுக்கொள்ள பலரும் வரிசையில் நின்று இருந்தனர், அந்த வரிசையில் இலவச உணவு பெற ஒரு ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
உணவு விநியோகம் செய்பவர் அவளைப் பார்த்து வரிசையில் இருந்து வெளியேறச் சொன்னார். உணவைப் பெறுவதற்கு முன்பு அவள் முதலில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று உச்சரிக்க வேண்டும் என்று அவர் கோரினார். அவள் மறுத்தபோது, அவள் ஸ்லோகம் சொல்லாவிட்டால் அவள் உணவு பெறமாட்டாள் என்று அவளிடம் சொல்கின்றார்.
வீடியோவில் அந்த நபர், "ஜிஸ்கோ ராம் நஹின் போல்னா ஹை லைன் மே கதா நஹி ஹோ" (ராம் என்று சொல்லாதவர்கள் வரிசையில் நிற்கக்கூடாது) என்று கூறுவதைக் கேட்கலாம்.அவர் அதற்க்கு மறுப்பு தெரிவிக்கவே அவளை வெளியேறச் சொல்கிறான்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இந்த விடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1851817665402462439
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
