Breaking News

உடல் ஆரோக்யத்திற்க்கு கேடு விளைவிக்கும் மையோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு mayonnaise banned in telangana

அட்மின் மீடியா
0

உடல் ஆரோக்யத்திற்க்கு கேடு விளைவிக்கும் மையோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு mayonnaise banned in telangana


மையோனைஸ்

முட்டையின் வெள்ளை கருவுடன், எண்ணெய், சோடியம் நிறைந்த உப்பு ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருளாகும்  மையோனைஸ். 

பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் சாண்ட்விச், பர்கர், கிரில் சிக்கன், மோமோஸ், ஷவர்மா உள்ளிட்டவற்றுடன்  சேர்த்து சாப்பிடும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது.

மேலும் சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் மயோனைஸ் தயார் செய்யப்படுகிறது.

உடல் ஆரோக்யத்திற்க்கு கேடு

தெலங்கானாவில் புட் பாய்சன் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்துள்ளது. 

குறிப்பாக, ஐதராபாத்தில் மோமோஸ் உணவை உட்கொண்டதால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 15 பேர் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுனர்.

இது தொடர்பாக நடந்த ஆய்வில், உணவில் மையோனைஸ் சேர்த்து கொண்ட பலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெலங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் மயோனைஸ் கலந்த ஷவர்மா, சிக்கன் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் உணவு பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்

                            

தடை:-

தெலங்கானா அரசு அடுத்த ஓராண்டிற்கு மையோனைஸ் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு30 -2 (அ)ன் கீழ் எடுக்கப்பட்டிருக்கிறது.ஓராண்டிற்கு மையோனைஸ் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

மயோனைஸ் மனிதர்கள் உண்ணத் தகுந்தது அல்ல என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறிள்ளார்கள்

உணவின் தரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு தெலங்கானா அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கடைகளில் மையோனைஸ் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback