ஹேக்கிங்கிலிருந்து உங்கள் மொபலை பாதுகாக்க வந்து விட்டது டிஜிட்டல் காண்டம் ஆப் முழு விவரம் Digital Condom
ஹேக்கிங்கிலிருந்து உங்கள் மொபலை பாதுகாக்க வந்து விட்டது டிஜிட்டல் காண்டம் ஆப் முழு விவரம்
ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் காம்டம் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை டிஜிட்டல் காண்டம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த புதிய செயலியானது, ஜோடிகள் பாலியல் உறவு கொள்ளும் போது புளூடூத் சாதனம் மூலம் ஸ்மார்ட்போன்களின் கேமரா மற்றும் மைக்குகளை முடக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் போனில் யாரேனும் அத்துமீறி வீடியோ பதிவு செய்யும் போது இந்த புதிய செயலானது அலார ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்ளில் சட்ட விரோத ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகாமால் தடுத்து விடுமாம்.
இதன் மூலம் பயனர்கள், தனிமையில் இருக்கும் போது ரகசியமாக ஹேக்கிங் செய்து யாரும் வீடியோ ரெக்கார்ட் செய்து விடுவார்களோ என அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லையாம்.
புளுடூத் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை செயல் இழக்க வைத்து விடுமாம்.
Camdom என்ற இந்த செயலி Digital Condom என்று அழைக்கப்படுகிறது.இந்த செயலி இதுவரை 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி ரெக்கார்டிங்க் செய்ய ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றால் கூடுதல் பாதுகாப்பு லேயர் போல செயல்பட்டு தடுத்து விடுமாம். ஏற்கனவே 30 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் இருப்பதாகவும், விரைவில் ஆப்பிள் போன்களிலும் கிடைக்கும் எனக் கூறியுள்ளது.
Tags: தொழில்நுட்பம்
