Breaking News

சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..! அட்டவணை இதோ

அட்மின் மீடியா
0

சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..! அட்டவணை இதோ

சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மார்க்கத்தில் வழக்கமான ரெயில் சேவை இன்று(29-ந்தேதி) அதிகாலை தொடங்கியது.முன்பு 120 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரெயில் சேவை துண்டிக்கப்பட்டபிறகு, 80 மின்சார ரெயில்கள் சேவை இயக்கப்படுகின்றன. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback