திருச்சியில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு போலீசார் தீவீர விசாரணை
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் அமைந்துள்ள வட தீர்த்த நாதர் சிவன் ஆலயம் கோவில் எதிர்புறம் உள்ள காவேரி ஆற்று படித்துறையில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு அருகாமையில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டது. து குறித்து அப்பகுதி மக்கள் ஜீயபுரம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக கைப்பற்றி வெடிகுண்டு சோதனை நிபுணர்களிடம் ஒப்படைத்தனர்.
காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த நீரில் ராக்கெட் லாஞ்சர் அடித்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து மாநில கியூ பிரிவு, பிற புலனாய்வு அமைப்புகளும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. த
ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்
