காஸியாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்கறிஞர் இடையே மோதல் வழக்கறிஞர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீசார் வைரல் வீடியோ
காஸியாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்கறிஞர் இடையே மோதல் வழக்கறிஞர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீசார் வைரல் வீடியோ
Ghaziabad, UP: Lawyers had a heated argument with the district judge outside his room due to dissatisfaction with recent orders. The police used lathi charge against the lawyers at the court, and there was also vandalism at the police station.
காசியாபாத் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணையின்போது வழக்கறிஞர் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிபதியின் அறையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து வழக்கறிஞர்களிடம் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது, நீதிமன்ற அறையிலுள்ள நாற்காலிகள் வீசப்பட்டன. மேலும், பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து நீதிபதிகளும் நீதிமன்றத்தில் பணி செய்வதை நிறுத்தினர். வழக்கறிஞர்கள் சங்கமும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1851209420304261351
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
