Breaking News

பெண் நீதிபதியை பின் தொடர்ந்து தொல்லை அளித்த வழக்கறிஞருக்கு தடை - பார் கவுன்சில் நடவடிக்கை

அட்மின் மீடியா
0

பெண் நீதிபதியை பின் தொடர்ந்து தொல்லை அளித்த வழக்கறிஞருக்கு தடை - பார் கவுன்சில் நடவடிக்கை

பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை அளித்ததாக விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

 

பெண் நீதிபதியை பின் தொடர்ந்து தொல்லை அளித்த வழக்கறிஞருக்கு தடை விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜுக்கு எதிராக பார் கவுன்சில் நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

மாவட்ட அளவிலான கோர்ட்டின் பெண் நீதிபதிக்கு வக்கீல் சிவராஜ் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்துள்ளார். அந்த பெண் நீதிபதியின் கோர்ட்டில் வழக்கு எதுவும் இல்லா விட்டாலும், அங்கேயே உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்துள்ளார். கோர்ட்டு பணிகளை ஆய்வு செய்ய சென்ற ஐகோர்ட்டு நீதிபதிக்கு இந்த தகவல் தெரியவர, வரும் அறிவுரை கூறி எச்சரிக்கை செய்துள்ளார். அதன்பின்னரும், பெண் நீதிபதியை பின் தொடர்வதை நிறுத்தவில்லை.
 
இதுகுறித்து ஐகோர்ட்டு உதவி பதிவாளர் பார் கவுன்சிலுக்கு அளித்த புகாரில், நீதி பரிபாலனத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு அவதூறு மற்றும் தொந்தரவு செய்தல் போன்ற செயல்களில் சிவராஜ் ஈடுபடுவதாக கூறியிருந்தார். இதையடுத்து, இந்த புகார் மீதான விசாரணை முடியும் வரை சிவராஜை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback