Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சென்னை-104 இத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அரசாணை நிலை எண்.44 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (T2) துறை நாள் 11.03.2015-ன்படி மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பட்டியல் பெற்றும், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டும், 
 
நேர்காணல் மூலம் நேரடி நியமனமுறையில் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 11.11.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
 
ஓட்டுநர் பணி:-
 
மாத சம்பளம்:  Rs.19500 - 71900/-
 
கல்வி தகுதி:  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கட்டாயம் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 
அலுவலக உதவியாளர் பணி:-
 
மாத சம்பளம்: Rs.15700 - 58100/-
 
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 
இரவு காவலர் பணி:-
 
மாத சம்பளம்: Rs.15700 - 58100/-
 
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
 
துப்புரவு பணியாளர் பணி:-
 
மாத சம்பளம்: Rs.15700 - 58100/-
 
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
 
இரவு காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர் பணி:-
 
மாத சம்பளம்: Rs.15700 - 58100/-
 
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
 
வயது வரம்பு:-
 
01.07.2024 மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது |அதிகபட்ச வயது 
 
1. பொதுப்பிரிவினர்
 
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
 
3. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 18 வயது முதல் 37 வயது வரை
 
4. ஆதரவற்ற விதவை (அனைத்து பிரிவினருக்கும்) அரசு விதிகளின்படி முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு 53 வரை தளர்வு உண்டு. 
 
மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு உண்டு.
 
குறிப்பு:-
 
1. விண்ணப்பதாரர் இந்தியராக இருத்தல் வேண்டும்.
 
2. விண்ணப்பதாரர் அவர்களின் விண்ணப்ப படிவம் சரியான தகவல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
 
3. குறைபாடுடைய/முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை அளித்துள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
 
4. நேர்காணலின் போது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் இதர அசல் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும்.
 
5. மதிப்பெண் சான்றிதழ்/வயது/இனம்/சாதி /இருப்பிடம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்ட விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும்.
 
6. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாளான 11.11.2024 மாலை 5.45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
 
7. நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி மற்றும் அகவிலைப்படி அளிக்கப்படமாட்டாது.8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் / விரைவு தபால் மூலமாக மட்டுமே இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது அலுவலகத்திலோ விண்ணப்பதாரர்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 
நிபந்தனைகள்:-
 
1. விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிபரங்கள் மற்றும் இதர விபரங்கள் ஆகியவற்றினை குறிப்பிட்டு முழுமையான வடித்தில் https://ctd.tn.gov.in/home என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்தல் வேண்டும். 
 
2. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்பப்படும் கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றுகளின் ஒளி நகலில் (குடும்ப அட்டை நகல், வேலை வாய்ப்பக பதிவு நகல், சாதி சான்று நகல், கல்வி மாற்றுச் சான்று நகல், மதிப்பெண் சான்று நகல்) சுயசான்றொப்பமிட்டு அனுப்ப வேண்டும். உரிய சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும். 
 
3. மாற்றுத் திறனாளி முன்னுரிமை கோருபவராக இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரால் வழங்கப்பட்ட சான்று நகல் இணைத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும். 
 
4. பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். 
 
5. இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தனராகவும், ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். (கட்டாயமல்ல). 
 
6. விண்ணப்பங்களை 11.11.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் பதிவஞ்சல் / விரைவு தபால் மூலமாக மட்டுமே கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 
 
தலைவர், தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம். உயர்நீதிமன்ற வளாகம், சென்னை 104. 
 
7. அஞ்சல் தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. 
 
8. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
 
9. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. 
 
10. நேர்காணல் அழைப்புக் கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவு என்று கருதக்கூடாது. 
 
11.நேர்காணல் செய்யும் நாள், நேரம் மாறுதருக்குட்பட்டது. 
 
12.எவ்வித சிபாரிசுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 
 
13. விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. 
 
14.ஒரே பதவிக்கு விண்ணப்பிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். 
 
15.ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழ்களுடன் தனித்தனி விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 
பணியின் தன்மைகள் (ஓட்டுநர் பதவியை தவிர்த்து மற்றப் பதவிகளுக்கு) :-
 
(அ) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்கள் தேவை மற்றும் அவசியத்திற்கேற்ப நீதிமன்ற அலுவலக பணிகள் அல்லது நீதிபதிகளின் வீட்டுப் பணிகளாகிய சமைத்தல், பாத்திரங்களை தூய்மை செய்தல், துணி துவைத்தல், தரையை தூய்மை செய்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், தேவைப்படும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் தோட்டப் பணிகளும் மேற்கொள்ள வேண்டும். 
 
(ஆ) தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நீதிபதி அறைகள், நீதிமன்ற அறைகள், நீதிமன்ற அலுவலக அறைகள், நீதிமன்ற வளாகம், பதிவு அறை மற்றும் நீதிமன்றம் சார்ந்த அனைத்து இடங்களையும் மற்றும் அதில் அடங்கிய உபகரணங்கள் மற்றும் ஊர்திகளையும் சுத்தம் செய்ய வேண்டும். 
 
(இ) நீதிமன்ற வளாகங்களில் உள்ள கூரைகள், சுவர்கள் மற்றும் மரச்சாமான்களில் உள்ள சிலந்தி வலைகளை நீக்குதல் வேண்டும். (F) இரவுக்காவலர் பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்கள் (1) நீதிமன்ற வளாகத்தை இரவு நேரங்களில் காவல் காக்க வேண்டும் மற்றும் (II) நீதிபதி அறைகள் மற்றும் நீதிமன்ற அலுவலக அறைகளை அலுவலக நேரத்திற்கு முன்பும், பின்பும் திறப்பது, முடுவது, கண்காணிப்பது மற்றும் காவல் பணியையும் மேலும் தேவைக்கேற்ப உட்பிரிவு (அ) முதல் (இ) வரை மேற்குறிப்பிட்டுள்ள பணிகளையும் செய்ய வேண்டும். 
 
(உ) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தங்கள் மேலதிகாரிகள் அவ்வப்போது வழங்கும் அனைத்து பணிகளையும் விடுமுறை நாட்களிலும் மற்றும் பணிநேரம் கடந்த நிலையிலும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். 
 
(ஊ) விண்ணப்பதாரர்கள் தொற்று நோய் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். 
 
(எ) தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் எந்த ஒரு நேரத்திலும் நிர்வாக காரணங்கள், தேவை மற்றும் அவசிய நிமித்தம் காரணமாக சென்னை, கூடுதல் மன்றங்களான மதுரை மற்றும் கோவை அலுவலகங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். 
 
பணியின் தன்மைகள் (ஓட்டுநர் பதவிக்கு மட்டும்):- 
 
1. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பித்த மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள், இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் எந்த ஒரு நேரத்திலும் நிர்வாக காரணங்கள், தேவை மற்றும் அவசிய நிமித்தம் காரணமாக சென்னை, கூடுதல் மன்றங்களான மதுரை மற்றும் கோவை அலுவலகங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். 
 
2. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து பணியாளர்களும் தங்கள் மேலதிகாரிகள் அவ்வப்போது வழங்கும் அனைத்து பணிகளையும் விடுமுறை நாட்களிலும் மற்றும் பணிநேரம் கடந்த நிலையிலும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
 
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://ctd.tn.gov.in/home%20
 
https://ctd.tn.gov.in/documents/10184/10937/stat.pdf/58044552-0112-4388-b732-3e08e68d83a9

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback