Breaking News

வெப்ப அலை மாநிலப் பேரிடராக அறிவிப்பு வெப்ப அலையால் மரணம் ஏற்ப்பட்டால் ₹4 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வெப்ப அலை மாநிலப் பேரிடராக அறிவிப்பு வெப்ப அலையால் மரணம் ஏற்ப்பட்டால் ₹4 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

The Tamil Nadu government has declared the heat wave as a state calamity.A compensation of ₹ 4 lakh will be given from the state calamity fund to those who die due to heat wave

 

 

வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து ₹4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு

மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலை தாக்கம், மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக வெப்ப ஆலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback