குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தகவல்
குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் 8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9 ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதினர்.
மேலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6744 ஆக உயர்ந்தது. பின்னர் 2,208 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 8,932 இடங்களாக அதிகரித்தது.
இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் அல்லது ஓரிரு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
இன்று சென்னையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் தேர்வு முடிவுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Tags: கல்வி செய்திகள்
