Breaking News

கேரளாவில் சோகம் கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து! 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் வைரல் வீடியோ Kasargod Fire

அட்மின் மீடியா
0

கேரளாவில் சோகம் கோயில் திருவிழாவில் ட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து! 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் வைரல் வீடியோ

கேரள மாநிலம் காசர்கோட்டில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 150 பேர் காயம் - 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்

நீலேஸ்வரம் கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையின்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து வாணவேடிக்கையின்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த பந்தலில் தீப்பற்றி விபத்துகாயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதி

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரர்காவு காளியாட்டத்தின்  இரவு 12 மணியளவில் அஞ்சுதம்பலத்தில் உள்ள வீரராகவர் கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து தீப்பிடித்து 150 க்கும் மேற்பட்டோர் உடல் தீக்காயமடைந்தனர். மூவாளம்குழி சாமுண்டி தேயரின் வெள்ளாட்டம் புறப்படும்போது பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தீப்பொறி விழுந்து மொத்தமாக வெடித்தது.

பட்டாசு வெடிக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் ஏதும் செய்யவில்லை எனவும், அனுமதி இன்றி பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்த திருவிழா அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1851107303606665489

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback