Breaking News

பூமியை விட்டு விலகும் நிலவு இனி ஒரு நாளுக்கு 25 மணி நேரம்? முழு விவரம் 25 hours in a day news

அட்மின் மீடியா
0

பூமியை விட்டு விலகும் நிலவு இனி ஒரு நாளுக்கு 25 மணி நேரம் முழு விவரம்

பூமியை விட்டு நிலா மெதுவாக விலகி செல்வதாகவும், அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலை. ஆய்வில் புதிய தகவல் வெளியாகி உள்ளது

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இதற்கு காரணம் என கூறும் விஞ்ஞானிகள், 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது என கூறுகின்றனர். 

 


ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது எனவும் இதனால், தற்போது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்

விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர் குழு நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்வது தெரிய வந்துள்ளது. அதன்படி பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.ஆனால் இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் ஆய்வில்:-

நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும். இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது 

அதேநேரம் சந்திரன் பூமியில் இருந்து விலகிச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் ஆய்வு இதுவல்ல.. பல ஆண்டுகளுக்கு முன்பே இதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். இருப்பினும், விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு வரலாற்று மற்றும் புவியியல் சூழல் குறித்த விரிவான ஆய்வை செய்கிறது. 

நிலவு தன்னை தானே சுற்றும் வேகம் என்பது எப்போதும் ஒரே வேகத்தில் தான் இருக்கிறது. ஆனால், பூமி சுற்றும் வேகம் என்பது பல்வேறு விஷயங்களைப் பொறுத்து மாறிக் கொண்டே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback