மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்பாதீர்கள் முழு விபரம் Dhayanidhi Alagiri fake news
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நலகுறைவால் மரணமடைந்தார்
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து துரை தயாநிதி கடந்த சிலநாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
இந்நிலையில் சமூகவலைதளங்களில் துரை தயாநிதி மரணமடைந்தார் என தகவல் பரவியது
இது குறித்து விளக்கம் அளித்த வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல் நிலைக் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 'துரை தயாநிதி ஆரோக்கியமாக இருக்கிறார்' என சி.எம்.சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
Tags: FACT CHECK அரசியல் செய்திகள்