உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது ஆதார் காட்டினால் போதும் என பரவும் வீடியோ உண்மை என்ன
அட்மின் மீடியா
0
உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது ஆதார் காட்டினால் போதும் என பரவும் வீடியோ உண்மை என்ன
பரவிவரும் செய்தி:-
உங்கள் வீட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு உங்கள் TOLLGATE டில் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும். தயவு செய்து இதை மேலும் தெரியப்படுத்த அனைவருக்கும் பார்வர்ட் செய்யவும் முன்னோக்கி மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.. இது மத்திய அரசின் உத்தரவு. 🙏 என ஓர் வீடியோ பரவி வருகின்றது.
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தவறாக புரிந்து கொண்டு பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 23.03.2022 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசிய வீடியோதான் அது
பலரும் ஷேர் செய்யும் வீடியோ பாதி தான் உள்ளது அதன் முழு வீடியோ இங்கு உள்ளது.
https://youtu.be/im9G82i8VLc?si=yGJZxoeKhhvP4UYy
அந்த வீடியோவில் நிதின்கட்கரி என்ன கூறியுள்ளார்:-
அந்த வீடியோவில் இரண்டு தகவல்கள் உள்ளது
1.சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆதார்
அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு அனுமதிச் சீட்டு Pass வழங்கப்படுகின்றது. அவர்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
2. அதேபோல் 60
கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே வரும். நான் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன் இன்னும் 3 மாதங்களில் 60
கிலோமீட்டருக்கு இடையேயான சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்
உள்ளூர் பாஸ் திட்டம்:-
சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவிற்க்குள் வசிப்பவர்கள் வியாபார நோக்கம் அல்லாமல் தங்கள் சொந்த தேவைக்காக வாகனங்களை பயன்படுத்துபவர்கள் சுங்கசாவடியை கடக்க மாதாந்திர பாஸ் வழங்கடுகின்றது இந்த பாஸ் வாங்க தற்போதைய கட்டணம் ரூ 330 ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி