Breaking News

மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து முழு விபரம்

அட்மின் மீடியா
0

மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து நடைபெற்றது

நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், பூடான் பிரதமர் ஷேரிங் தோப்கா உள்ளிட்ட 8000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்கப்படுகின்றது

மோடியின் அரசியல் வாழ்கையில் கூட்டணி ஆட்சிக்கு அவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். 

இன்று மாலை 7.15 மணிக்கு டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்று உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்று உள்ளது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்களுக்கு தில்லியில் பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து இன்று அளிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன், எல்.முருகன், குமாரசாமி உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அப்போது 100 நாள் செயல்திட்டம் குறித்த புதிதாக தேர்ந்கெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

மத்திய அமைச்சர்களாக 50க்கும் மேற்பட்டோர் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது கட்சி எம்.பி. ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மட்டுமே தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மோடியின் 3வது அரசின் அமைச்சரவையில் எல்.முருகனுக்கு மீண்டும் இடம்அமைச்சரவையில் இடம்பெற உள்ளோருக்கு பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்தில் எல்.முருகன் பங்கேற்பு

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback