Breaking News

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயம்பேடு மசூதி, மற்றும் மதரசாவை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு. masjid e hidayah koyambedu

அட்மின் மீடியா
0

சென்னையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடித்து நகர்ப்புற சட்ட தரத்தை நிலைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை கோயம்பேட்டில் உள்ள மஸ்ஜித்-இ-ஹிதாயா மற்றும் அதனுடன் தொடர்புடைய மதரஸாவை இடிப்பது தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமான நிலத்தில் மஸ்ஜித்-இ-ஹிதாயா மற்றும் மதரஸாவின் கட்டுமானம், தேவையான ஒப்புதல்கள் இல்லாமல் மற்றும் 2020 இல் உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வேலை நிறுத்த அறிவிப்பை மீறி தொடங்கப்பட்டது, என கோயம்பேட்டில் அமைந்துள்ள மசூதி மற்றும் மதரஸாவை "முற்றிலும் சட்டவிரோதமாக கட்டப்பட்டது" என்று கூறி இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது 

இந்த  உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, உச்ச உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வ நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.விசாரணையில் உச்ச நீதிமன்றமும் மசூதி மற்றும் மதரசா கட்டடங்கள் சட்ட விரோதமாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து, அதனை இடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback