Breaking News

தருமபுரம் மடாதிபதியை மிரட்டி பணம் பறிக்க முயற்சி 4 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

தருமபுரம் ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் - பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது! 



மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்

தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் உள்ள்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தற்போது மடத்தை வழிநடத்தி வருகிறார். 

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி அளித்துள்ள புகாரில் தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9  பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக பிரமுகர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், தருமபுரம் ஆதீன பணிவிடை செந்தில், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback