Breaking News

பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏல அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏல அறிவிப்பு முழு விவரம்

பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது என காவல்துறை தலைமை அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை-4. 

காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 07 இரண்டு சக்கர வாகனங்கள்) எதிர்வரும் 02.12.2023 அன்று காலை 11.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில், திறந்த நிலை ஏலம் மற்றும் மூடிய நிலை ஏலத்தில் விடப்படுகிறது. 

ஏலம் எடுக்க விரும்புவோர் 01:122023 மாலை 5.00 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். 

காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 02.12.2023 அன்று காலை 10.00 மணி முதல் 11:15 மணிக்குள் ஏலம் விடும் இடத்தில் முன் பணமாக ரூபாய். 1000/- செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். 

முன் பணத்தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ( ஜி.எஸ்.டி) முழுவதையும் துறையில் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 

முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback