Breaking News

25 நிமிடங்கள் தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம் வீடியோ பார்க்க Operation Sindoor

அட்மின் மீடியா
0

25 நிமிடங்கள் தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம் வீடியோ பார்க்க 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது



பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தாக்குதல் புலனாய்வு அமைப்பு அளித்த உறுதியானதகவல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. 

பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத நிலைகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/SparkMedia_TN/status/1919988731798553058

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback