பட்டுக்கோட்டையில் இளம்பெண் தலை துண்டித்து கொலை முழு விவரம்
பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை முழு விவரம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் பாலன் மனைவி சரண்யா, 35, நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலனும், சரண்யாவும் அப்பகுதியில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.
நேற்று இரவு சரண்யா கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கழுத்து மற்றும் தலையின் பின்பக்கத்தில் வெட்டப்பட்டதால் தலை துண்டானது.
தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சரண்யா மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளர் என்பதும் தெரியவந்துள்ளது
சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்படும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலை செய்த கும்பல் யார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலை துண்டிக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்