Breaking News

சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு..! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன என சென்னை பெருநகர காவல் ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 

சென்னையில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி

நவம்பர் 4-ஆம் தேதி முதல் 

ஆட்டோக்கள் 40 கி.மீ வேகம் வரை செல்லலாம். 

இரு சக்கர 50 கி.மீ வேகம் வரை செல்லலாம்.

இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரை செல்லலாம் 

குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருச்சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில்தான் பயணிக்கலாம். 

மூன்று சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. 

குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback