aavin delite புதிய ஆவின் டிலைட் பால் அறிமுகம் டிசம்பர் 1 முதல் ரூ.21க்கு விற்பனை ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
aavin delite ஆவின் டிலைட் பால் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும்" - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் எனும் நல்நோக்கத்துடனும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தோற்றுவிக்கப்பட்டு ஒரு வணிக நிறுவனமாக மட்டுமல்லாமல் ஒரு சமூக இயக்கமாகவும் இயங்கி வருகிறது. இதன் மூலம் பால் ,பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, ஏற்கனவே ஆவினில்
ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் ஒரு பால் பாக்கெட்டில் 3 % கொழுப்பு உள்ளது.
பிங்க் ஆவின் பால் பாக்கெட்500 மில்லி லிட்டர் பிங்க் ஆவின் பால் பாக்கெட்டெல் 1.5 % கொழுப்பு உள்ளது. இதை டையட் பால் பாக்கெட் என்று அழைக்கிறார்கள். இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் ஆகும்.
பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 4.5 % கொழுப்பு இருக்கும். இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர்.
பழுப்பு நிற ஆவின் பால் பாக்கெட்500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 6 % கொழுப்பு இருக்கும். இதுவே முழுக் கொழுப்பு செறிந்த பால் ஆகும்.
இந்நிலையில் மக்கள் விரும்பும் ஆவின் டிலைட் பால் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்பட உள்ளது. அரை லிட்டர் ஆவின் விலை பால் ரூபாய் 21 விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்