Breaking News

ஆந்திராவில் கத்தியை காட்டி மிரட்டி கேசியரிடமிருந்து 6.50 லட்சம் பணம் கொள்ளை சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

ஆந்திராவில் கத்தியை காட்டி மிரட்டி கேசியரிடமிருந்து 6.50 லட்சம் பணம் கொள்ளை சிசிடிவி வீடியோ

ஆந்திர மாநிலம் நரசாபுரத்தில் வங்கிக்குள் புகுந்து கத்தியைக் காட்டி கேசியரை மிரட்டி ₹6.50 லட்சத்தை திருடிய கொள்ளையன் சிசிடிவி வீடியோ வைத்து கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு!

 


 இது தொடர்பாக வெளியான வீடியோவில்

ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்க்கு கோதாவரியில் உள்ள நரசாபுரம் வங்கியில் ஒருவர் முகத்தை காட்டாமல் கர்சீப் அணிந்து வங்கிக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் தங்க நகை கடன் வேண்டும் என்று கேட்டார்

அப்போது வங்கி ஊழியர்கள் தங்க மதிப்பீட்டாளர் வெளியே சென்றுவிட்டார் சிறிது நேரம் காத்திருக்க கூறியுள்ளார்கள் சிறிது நேரம் காத்திருந்த அவர் வைத்திருந்த பையில் தான் கொண்டு வந்திருந்த கத்தியை வெளியே எடுத்து வங்கி ஊழியர்களை மிரட்டி, மேஜையில் இருந்த சுமார் 6லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு ஓடினார்யுள்ளார்.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

 வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்:-


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback