டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
டிசம்பர் 4 ம் தேதி இந்த மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு பகுதியில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா சமீபத்தில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. வரும் டிசம்பர் 4 ம் தேதி தேர்பவனி நடக்கிறது.
இந்நிலையில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை டிசம்பர் 3ம் தேதி சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் (டிச.04) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 16-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்