அதிராம்பட்டினத்தில் வீட்டுக்குள் வந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்
அதிராம்பட்டினத்தில் வீட்டுக்குள் வந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்
அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே உள்ள வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி உள்ளன. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் காயமடைந்த குழந்தையை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
குழந்தையின் தலை, கை போன்ற இடங்களில் நாய்கள் கடித்தும், பிராண்டியும் வைத்து உள்ளன. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நாய் கடிக்காக சிகிச்சை பெற பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் நாய்களை கட்டுப்படுத்த . சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்