Breaking News

கோவையில் பிரபல நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 100 சவரன் கொள்ளை 5 தனிப்படைகள் அமைப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று காலை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது கடையில் உள்ள நகைகள் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வளவு நகைகள் திருடப்பட்டுள்ளது என்ற தெளிவான விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருந்தும் முதற்கட்ட தகவலின்படி 100 சவரன் அளவில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடையின் 2 மற்றும் 3வது தளத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது எனவும், கடையின் வெண்டிலேட்டர் துளை வழியாக சென்று கொள்ளை அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback