Breaking News

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு Statue of Equality வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு Statue of Equality வைரல் வீடியோ

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அண்ணல் அம்பேத்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!இச்சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான அம்பேத்கர் சிலை இதுவாகும்.

அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (ஏஐசி) 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்ட 19 அடி முழுஉருவ அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படும் சட்ட மேதை அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். 1990-ல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

நமது நாட்டிற்கு வெளியே அம்பத்கருக்கு அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலை இதுவேயாகும். 19 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/BahujanNVoice/status/1713404473723453757

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback