இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கண்ணியமிகு ஆலிம்பெருமக்கள் மற்றும் அன்பிற்கினிய இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஃபலஸ்தீன மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலை கண்டித்து இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 31.10.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவும்.
குறிப்பாக சென்னையில் உள்ள ஆலிம் பெருமக்கள் வரும் 27.10.2023 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் இதனை அறிவிப்புச் செய்யுமாறும் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.