தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த, தயாரிக்க தடை– அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிக்கவும், அதை பயன்படுத்தவும் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், காத்தாடி பறக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் காயங்களை ஏற்படுத்துவது உண்மை தான்.
கண்ணாடி,நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட, மாஞ்சா நூல்கள்/காத்தாடி பறக்கும் நூல்களின் உற்பத்தி, விற்பனை, மற்றும் கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பறவைகள், கால்நடைகள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மாஞ்சா நூல்கள் மட்காத ப்ளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடாக அமைகின்றன.
உயிர்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு மாஞ்சா நூல்களுக்கு தடைவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்