சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபட்ட போலி டிக்கெட் பரிசோதகர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபட்ட போலி டிக்கெட் பரிசோதகர் கைது
மாதம் ஒருமுறை சென்னை வந்து புலம்பெயர் தொழிலாளர்களிடம் டிக்கெட் உறுதி செய்து தருவதாகக் கூறி ₹5000 வரை பணம் பெற்றுக்கொண்டு தப்பியுள்ளார்
மாதத்திற்கு 5 அல்லது 6 பேரிடம் மட்டும் இப்படி பணம் திருடிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று விடுவதாக விசாரணையில் கூறியுள்ளார்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் உடை அணிந்த ஒரு நபர் தன்னை டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி பயணிகளின் டிக்கெட்டுகளைப் பரிசோதித்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் அந்த நபரை விசாரித்தபோது அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளிடம் டிக்கெட் உறுதி செய்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. உஅடனடியாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்