குண்டு வைத்தது நான் தான் காவல்நிலையத்தில் சரணடைந்த நபர் வாக்கு மூலம் வீடியோ
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்புகேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பேபி பிவி, உதவி ஆணையர் ஏசிபி திருக்காக்கரா, இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 20-25 பேர் காயமடைந்துள்ளதாகவும்உறுதிப்படுத்தினார்.
மேலும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, ஆரம்ப விசாரணையின்படி, 5 முதல் 10 வினாடிகளில் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தனஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில், அரங்கங்களில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் மாநாட்டு அரங்கின் ஒன்றில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காலை 9.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயில் எரிந்த உடல் ஒன்றை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், மாநாட்டு அரங்கில் பிரார்த்தனை மேற்கொண்டிருந்தபோது, பல முறை குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA
சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த
NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை
மேற்கொண்டு வறுகின்றனர்.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர், திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்
தற்போது அந்த நபரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல்நிலையத்தில் சரணடைந்துள்ள டொமினிக் மார்ட்டின், போலீசாரிடம் சரணடைவதற்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Forumkeralam2/status/1718593982656098481
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்