Breaking News

செங்கல்பட்டு அருகே மின்சார ரயில் மோதி 3 மாற்றுத் திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு.!

அட்மின் மீடியா
0

ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு!



செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூன்று மாற்றுத் திறனாளி சிறுவர்கள் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதி வழியே வந்த மின்சார ரயில் அந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.இந்த மோதலில் சிறுவர்கள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் உயிரிழந்த 3 சிறுவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ், ரவி, மஞ்சுநாத் என்பது தெரிய வந்ததுஇந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback