வங்க தேசத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 20 பேர் பலி
வங்கதேசத்தில், பயணியர் ரயில் மீது சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள்
வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் வடகிழக்கில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் பைரப் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. சரக்கு ரயில் எதிர்திசையில் வந்த பயணிகள் ரயிலின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நடந்துள்ளது
இந்த விபத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயடமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. நேற்று மாலை 4:00 மணியளவில் நடந்த இந்த விபத்தானது, ஒரு ரயில் மற்றொரு ரயில் வரும் பாதையில் நுழைந்ததால் ஏற்பட்டதாக தெரிய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
Tags: இந்திய செய்திகள்